கத்தார் ஏர்வேஸின் இலவச 100000 டிக்கெட்டும், ஊழியர்களின் இடை நிறுத்தமும்


கடந்த திங்கட்கிழமை (May 11, 2020), கத்தாரின் தேசிய விமானமான கத்தார் ஏர்வேஸ், உலகெங்கிலுமுள்ள 100000 மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு எந்த இடத்திற்கும் செல்வதற்குரிய இலவச டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்திருந்தது.

இலவச டிக்கெட்டுகளிலிருந்து பயனடைய இருக்கும் மருத்துவர்கள் தாதியர்கள் மட்டுமன்றி அனைவராலும் இந்த விடயம் பாராட்டுக்குள்ளானது.

ஆனால் இந்த அறிவிப்பு விமான நிறுவனத்தின் பணம் உழைக்கும் நடவடிக்கை என்றே பலராலும் இப்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

ஏனெனில் குறிப்பிட்ட டிக்கெட் கிடைக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பெரும்பாலும் தனியாக பயணம் செய்ய வாய்ப்பில்லை, பொதுவாக தங்களது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களுடனையே பயணம் செய்வார்கள். எனவே குடும்ப உறுப்பினர்களுக்காக எப்படியும் டிக்கெட் சுகாதார ஊழியர்களால் வாங்கப்படும் இதனால் விமானத்தின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதே வேளை 30% வீதமான அதாவது 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் பணியியிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாகவும் கத்தார் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது.

இவ்வாறு வேலை இழப்பவர்களில் அதிகமானோர் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் விமான நிலையத்தில் வேலை செய்த்தவர்களே, இதன் பொருள் விசுவாசத்திற்கு வெகுமதி அளிப்பதற்கு பதிலாக, கத்தார் ஏர்வேஸ் உண்மையில் அவர்களை கண்டிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source : dohanews