பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டாலும், 100000 இலவச டிக்கெட்டுகளை சுகாதாரநிபுணர்களுக்கு வழங்க கத்தார் ஏர்வேஸ் நடவடிக்கை


கொரோனாவின் தாக்கத்தினால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்தாலும், நாட்டுக்காக கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தவும் அதனை குணப்படுத்தவும் பாடுபட்ட சுகாதார ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக 100000 பேருக்கு இலவச டிக்கெட்டுகளை கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

100,000 இலவச டிக்கெட்டுகளை வழங்கும் கத்தார் ஏர்வேஸ் அறிவித்த முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் (EU) வரவேற்றுள்ளது.

கத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் டாக்டர் கிறிஸ்டியன் டுடோர், கத்தார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

இவ் இலவச டிக்கெட்டுகளை இன்று இரவு 00.01 முதல் 18ம் திகதி 23.59 வரை பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.