கத்தாரில் இன்று 1365 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 33969 ஆக உயர்வு


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 33969 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (18.05.2020) மட்டும் புதியதாக 1365 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதே நேரம் 529 பேர் 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 4899 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.