கத்தாரில் இன்று 1390 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 26539 ஆக உயர்வு


இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பல கட்டுப்பாடுகள் கத்தாரில் தளர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 26539 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (13.05.2020) மட்டும் புதியதாக 1390 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதே நேரம் 124 பேர் 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3143 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.