மேலுமொரு மரணம் – கத்தாரில் இன்று 1491 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 37097ஐகடந்தது


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 37097ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் (20.05.2020) மட்டும் புதியதாக 1491 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதே நேரம் 62 வயதுடைய வெளிநாட்டைச் சேர்ந்த மேலுமொருவர் இன்று மரணித்துள்ளார். மரண எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 17 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தமாக 172 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரம் 966 பேர் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 6600 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.