கத்தாரில் இன்று 1526 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 25149 ஆக உயர்வு


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 25149ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (12.05.2020) மட்டும் புதியதாக 1526 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.