கத்தார் செனைய்யா பகுதியில் 17 தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - MME


நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பேணுவதை உறுதி செய்வதற்காக செனைய்யா பகுதியில் தொழில்துறை வசதிகள் குறித்து பல ஆய்வுகளை ஆரம்பித்திருக்கிறது.

இதன் போது செனையாவிலுள்ள 92 தொழிற்சாலைகளை ஆய்வு செய்ததில் அதில் 17 தொழிற்சாலைகள் விதிகளை மீறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இத் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கத்திற்கு பின்னர் கத்தாரில் பல இடங்களில் சுத்தம் மற்றும் சன நெருக்கடிகள் சம்பந்தமான ஆய்வுகள் அதிகம் அதிகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.