கத்தாரில் இன்று 1733 புதிய கொரோனா நோயாளிகள்! எண்ணிக்கை 28272 ஆக உயர்வு


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 28272 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (14.05.2020) மட்டும் புதியதாக 1733 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதே நேரம் 213 பேர் 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ளதாகவும் இவ் எண்ணிக்கை மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3356 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பல கட்டுப்பாடுகள் கத்தாரில் தளர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.