கத்தாரிலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் மே 18 முதல் ஆரம்பம்


கொரோனா தாக்கத்தின் பின்னர் கத்தாரிலிருந்து இலங்கைக்கான முதல் விமான சேவை இந்த மாதம் 18 ம் திகதி முதல்ஆரம்பிக்க இருப்பதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இவ் விமானத்தில் பயணம் செய்வதற்கு சில அறிவுறுத்தல்களை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது;
  • இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றால் அனுப்பப்பட்ட பயணிகளின் பெயர்களில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு இடம்பெறும்.
  • தெரிவு செய்யப்பட்டவர்கள் டிக்கெட்டை பெறுவதற்காக தோஹாவில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தினால் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
  • கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு திருப்பி அனுப்பும் விமானத்தில் செல்வதற்கு தெரிவு செய்யப்பட பயணிகளுக்கான டிக்கெட்களை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்சினால் சிறப்பு நேரம் அறிவிக்கப்படும்.
  • எனவே உங்களைத் தொடர்பு கொள்ளும் வரை காத்திருங்கள்.

மேலதிக தகவல்களுக்கு இலங்கை ஏர்லைன்ஸ் தோஹா அலுவலகத்தை பின்வரும் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Telephone : 4441217, 444360286, 44446345, 4432262
Email : doh.res@srilankan.com

Official Link : https://www.facebook.com/notes/srilankan-airlines-doha/passengers-who-are-travelling-on-the-special-repatriation-flight-to-sri-lanka-pl/255612749182019/?fref=mentions&__tn__=K-R