கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் 2 திருப்பி அனுப்பும் விமானங்கள்புறப்பட்டது


இன்று கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு வந்தேபாரத் திட்டத்திற்கமைவாக இரண்டு திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டுள்ளன.

AI 1924 இலக்க விமானமொன்று 140 பயணிகளுடன் விசாகப்பட்டினத்திற்கும் மற்றும் 7 கைக்குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் IX-0244 177 இலக்க விமானம் ஹைதராபாத்திற்கும் புறப்பட்டுள்ளது.

இவ் விமானங்களை ஒழுங்கு செய்து கத்தாரில் வேலைகளை இழந்தவர்கள், கர்ப்பிணிகள், குழைந்தைகள் பெரியோர்கள் போன்றவர்களை சொந்த நாட்டுக்கு செல்ல வழியமைத்து தந்த கத்தார் மற்றும் இந்திய தூதரகங்களும் அனைத்து பிரயாணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.