கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கத்தாரில் இருக்கின்ற இந்தியர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல இரண்டாம் கட்டமாக மேலும் 6 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
6 விமானங்களின் திகதி மற்றும் செல்லும் இடங்கள்;
- May 20 - ஹைதராபாத்
- May 20 - விசாகப்பட்டினம்
- May 20 - கண்ணூர்
- May 21 - கொச்சி
- May 22 - பெங்களூரு
- May 24 - கயா
நாட்டிற்கு திரும்பிக் செல்ல பதிவு செய்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு கேரளவைச் சேர்ந்தவர்களாகும், எனவே மற்ற மாநிலங்களை விட கேரளாவிற்கு அதிகமான விமானங்கள் இருக்கும் என்பது பொதுவானது.
இருந்தாலும் அடுத்தடுத்த வாரங்களில் மற்றைய மாநிலங்களுக்கும் அதிகமான விமானங்களை இயர்க்குவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.