கத்தாரில் இன்று (20.05.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்ட முக்கியவிடயங்கள்


இன்று கத்தார் நேரப்படி இரவு 10 மணிக்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கத்தாரில் கொரோனா சம்பந்தமான அப்டேட்களை, தேசிய தொற்றுநோய்களுக்கான ஆயத்தக் குழுவின் இணைத் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான டாக்டர் Abdullatif Al Khal தெரிவித்துள்ளார்.

கொரோனா வழக்குகளைப் பொருத்தவரை கத்தார் இன்னும் தாக்கத்தின் உச்ச கட்டத்தில்தான் உள்ளது, இதன் காரணமாக பெருநாள் தொழுகைகள் மற்றும் கொண்டாட்டங்களை வீட்டிலையே செய்து கொள்ளுமாறும் வெளியில் செல்லும்போது சமூக இடைவெளிகளை தொடர்ந்தும் பேணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்ட சில முக்கிய விடயங்கள்;
  • இப்தாருக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு கத்தாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் அர்ப்பணிப்பு இல்லாததால் தொற்றுநோய்களின் வீதம் அதிகரித்தது.
  • பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.
  • கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்று கத்தாரில் அதிகரித்திருந்தது.
  • தீவிர சிகிச்சையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 45 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள்.
  • தீவிர சிகிச்சையில் இருக்கும் 172 பேரில் 74 பேருக்கு வென்டிலேட்டர்கள் தேவை.
  • மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் சுகாதார அமைச்சு சார்பாக நன்றி.
  • நாங்கள் தொற்று நோய் மையத்தில் பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்துகிறோம், இதுவரை 100 நோயாளிகள், மீட்கப்பட்ட 96 நன்கொடையாளர்களிடமிருந்து பிளாஸ்மாவைப் பெற்றுள்ளனர்.
  • கத்தாரில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுவதில் எஹ்தெராஸ் ஆப் (Ehteraz App) முக்கிய பங்கு வகிக்கிறது.
  • காரில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்க முடியாது என்ற அறிவிப்புக்கு வருந்துவதுடன், ஆனால் இது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக்கியமாக கடைபிடிக்கப்படவேண்டியதாகும்.