ஆடிப் போயுள்ள வல்லரசுகள் - கொரோனா பாதிப்பில் ரஷ்யா 2 வது இடம் - முதலிடம் அமெரிக்கா


உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ரஷ்யா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது, அங்கு மேலும் 9,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 47,71,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,14,683 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசர பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் உலக அளவில் ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது,

அங்கு மேலும் 9,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,81,752 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்ததால், அங்கு பலி எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது. 

உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா (15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்) இருந்து வருகிறது.