கத்தாரில் வீட்டை விட்டு வெளியேறும்போது பேஸ் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - மீறினால் 3வருட சிறை அல்லது 200000 ரியால் தண்டம்


COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும்போது அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் முகமூடி அணிவதை அமைச்சரவை May 17 முதல் கட்டாயமாக்கியுள்ளது.

பிரதமரும் உள்துறை அமைச்சருமான எச். எச் இ ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்;
  • வாகனத்தில் செல்லும்போது அல்லது தனியாக இருக்கும்போது தவிர ஏனைய நேரங்களில் பேஸ் மாஸ்க் கட்டாயம் அணிதல் வேண்டும்.
  • இதனை மீறுபவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் QR 200000அபராதம் அறவிடப்படும்.
  • இது ஞாயிற்றுக்கிழமை (மே 17, 2020) முதல் நடைமுறைக்கு வருகிறது.