கத்தாரில் இன்று நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பெருநாள் எனஅறிவிப்பு


ஷவ்வால் தலைப்பிறை தென்படாததால் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து பெருநாள் தினம் ஞாயிற்றுக்கிழமை என்று இஸ்லாமிய விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

பல வருட நோன்புகள் 29 ஆக பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் 30 ஆக கிடைத்திருக்கின்றது.

எமது வாசகர்கள் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.