கத்தாரில் மீண்டும் அனைத்து கடைகள் மற்றும் வியாபர நடவடிக்கைகளையும் மே 30 வரைமூடுவதற்கு அதிரடி அறிவிப்பு


இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபாவினால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் கேட்டரிங் கடைகள், மருந்தகங்கள் மற்றும் விநியோகங்களை மேற்கொள்ளும் உணவகங்களைத் தவிர அனைத்து கடைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் மே 19 முதல் மே 30 வரை நிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கத்தார் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரும் EHTERAZ பயன்பாட்டை (EHTERAZ App) கட்டாயம் டவுன்லோட் செய்ய கடமைப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்;

முதலாவது
  • எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும்போது அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் ஸ்மார்ட்போன்களில் EHTERAZ பயன்பாட்டை கட்டாயம் நிறுவ வேண்டும்.
  • இந்த முடிவு 22/5/2020 வெள்ளிக்கிழமை முதல் மேலதிக அறிவிப்பு வரை நடைமுறைக்கு வரும்.
இரண்டாவது

வாகனத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும், ஆனால் பின்வரும் நிகழ்வுகளில் அதிகபட்சம் மூன்று நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்;
  1. டாக்சிகள் மற்றும் லிமோசைன்களில் போக்குவரத்து.
  2. குடும்பங்களாக வாகனங்களில் செல்லும்போது.
  3. ஆம்புலன்ஸ் மற்றும் பொது சுகாதார, பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு சொந்தமான வாகனங்கள் இதிலிருந்து விளக்கப்பட்டுள்ளன.
  4. பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைத்தல்.

இந்த முடிவுகளுக்கு கட்டுப்பாடாத வியாபர நிலையங்கள் மூன்று வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அல்லது 200000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.