நாளை குவைத்திலிருந்து 448 இலங்கையர்கள் நாட்டிற்கு செல்கின்றனர்


குவைத் நாட்டிற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்ற 448 இலங்கையர்கள் நாளை நாட்டிற்கு செல்லவுள்ளனர்.

குவைத்திலுள்ள இலங்கை தூதகரகம் வாயிலாக இவர்கள் அந்நாட்டின் இருவிமானங்கள் மூலம் தாயகம் திரும்பவுள்ளனர்.

இதில் வீசா இன்றி தங்கியிருந்த 383 பேர் உள்ளடங்குவதோடு, 65 பேர் முகாம்களில் தங்கியிருந்தவர்க்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நாடு திரும்பவுள்ள இவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.