கத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளை முதல் அதிகமாக பரவப்போகிறது குறித்துவெளியான தகவல்கள் தவறானவை


மே 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கத்தாரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்று பொது சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு தனது உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுமாறும், வதந்திகளை பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும் போது மக்களை கேட்டுள்ளது.

இறுதியாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், கத்தார் இன்னும் விளைவின் உச்சத்தை எட்டவில்லை, விளைவில் ஒரு கட்டத்தில்தான் நுழைந்துள்ளோம் – என்று தேசிய தொற்றுநோய்களுக்கான ஆயத்தக் குழுவின் இணைத் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான டாக்டர் அப்துல்லாதீப் அல் கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.