பிள்ளைகளுக்கு உணவு வழங்க பழங்கள் காய்கறிகள் வியாபாரம் செய்யும் அபுதாபியை சேர்ந்தஆசிரியர் - கொரோனா தாக்கம்


காலையில் எழுந்து நேர்சரிக்கு செல்லும் அவரது வழக்கம் காய்கறி சந்தைக்கு செல்வதற்கு இப்போது மாறியுள்ளது.
அபுதாபியிலுள்ள ஒரு நர்சரியில் ஆசிரியராக பணி புரிந்துகொண்டிருந்த ஆசிரியரொருவர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள், நேர்சரிகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டதனால் ஊழியம் பெறாத விடுமுறையில் செல்லும்படி அனுப்பப்பட்டார்.

அவரது மாதாந்த கொடுப்பனவு 500 திர்ஹம் ஆக மட்டும் அறிவிக்கப்பட்டது, இதனால் 11 வயது, 12 வயது மற்றும் 20 மாத குழந்தைகள் உள்ள இவரால் தங்கியிருக்கும் அறை மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் வழங்குவதில் பெறும் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர் இவர் என்பதால் வருமானம் திரட்டுவதற்குரிய வழியாக பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோக சேவைகள் குறித்து ஆன்லைன் விளம்பரத்தை வெளியிட முடிவு செய்தார்.

இதேபோன்ற ஒரு விளம்பரத்தை துபாயில் உள்ள ஒரு பெண்ணிடமிருந்து பேஸ்புக்கில் பார்த்தேன், அதனால் நானும் அவ்வாறே செய்யவேண்டும் என்று நினைத்ததாக இவர் கூறியுள்ளார்.

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் துறையில் (events sector) இவரின் கணவர் பணிபுரிகிறார். “அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவர் பணிபுரிந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, ”என்று அவர் கூறினார்.

இது போல்தான் இப்போது அபுதாபி மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்ற விடயமாகும்.

இதனை வெளியில் சொல்லாமல் இருப்பவர்களே மிக அதிகம் இந்த நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன் அனைத்தும் சரியாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.