கொரோனாவினால் மூடப்பட்டவைகளை மக்கள் பாவனைக்கு திறக்கலாமே !


மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பள்ளிவாசல், பார்க், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்களில் சாப்பிட தடை போன்ற பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனாவின் நாளாந்த தாக்க எண்ணிக்கை குறைந்த பாடில்லை, எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை...

இந்த நிலைமையில் தனியார் நிறுவனங்கள் அறிவுரைகளை பின்பற்றி இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே தனியார் நிறுவனங்கள் வேலை செய்யமுடியுமென்றால், மூடப்பட்ட மற்றைய இடங்களையும் திறப்பதால் பெரிதாக ஒன்றும் ஏற்படப்போவதில்லை, ஏனெனில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அதே நபர்கள்தான், பொது இடங்களிலும் தங்களது தேவைகள் நிமித்தம் செல்வார்கள் மேலும் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் போது எவ்வாறான காப்பு முறைகளை கையாள்கிறார்களோ அதை ஏனைய இடங்களிலும் அவர்கள் கையாண்டால் சரிதானே...

இப்போதைய நிலைமையில் கொரோனாவுக்கு அனைவரும் பழகிவிட்டார்கள், வெறுமனே பள்ளிவாசல்களை, மால்களை மற்றும் உணவகங்களை மூடுவதால் மட்டும் இனி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

கட்டுப்படுத்துவதென்றால் ஒன்றும் இயங்காமல் முற்றாக மூட வேண்டும், இல்லையெனில் வழமை போல பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி அனைத்தும் நடக்கட்டும்.