இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
- பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்காது.
- பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- தற்போது போலவே உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளை தொடரலாம்.
- சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் திறக்கப்படாது.
- விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சமூக, அரசியல், விளையாட்டு மற்றும் மதக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
- வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி.
- சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத, அதாவது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து, தனிப்போக்குவரத்து இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இதற்கு அந்த குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.