கொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப்


அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப் மலேரியாவை தடுக்க  உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை கொரோனா தாக்கத்திற்கு தடுப்பாக உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
உலகில் இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது மலேரியாவிற்கு எதிரான மருந்தானாலும், அதிக பின்விளைவுகளை கொண்ட மருந்து ஆகும்.

இதனை உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து இரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

அண்மையில்,  இந்தியாவுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டே அவர் இவ் மருந்தை வாங்கினார். ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் தனது பேட்டியில், நான் கொரோனா தடுப்பிற்காக இவ் மருந்தை உட்கொள்வதாகவும், தனக்கு கொரோனாவிற்கான அறிகுறி இல்லையெனவும், தான் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கடந்த ஒன்றரை வாரமாக சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.