பயணிகள் பாதுகாப்பு கருதி பணியாளர்களுக்கு கத்தார் ஏர்வேஸ் வழங்கிய அறிவிப்பு


கத்தார் ஏர்வேஸின் கேபின் பணியாளர்கள் (Cabin Crew staffs) அனைவரும் மே 20 முதல், பயணிகள் நன்மை கருதி பாதுகாப்பு உபகரணங்களை அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கு முதல் பேஸ் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்திருந்தாலும் இப்போது மேலதிகமாக PPE யும் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணத்தின் போது பயணிகள் மற்றும் பணியாளர்களின் தொடர்புகளின் போது கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.