பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு


கத்தாரிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

பிரான்ஸில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 263பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் முறையே 80 மற்றும் 70 என்ற உயிரிழப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திடீரென உயிரிழப்பின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,423 பேரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,643 பேரும் ஆகும்.