வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு முதலில் அழைத்துவரப்படவிருப்பவர்கள்


இலங்கைக்கு அழைத்துவரப்படவிருப்பவர்கள் மாணவர்கள் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பிரிக்கப்படுவார்கள்.

கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியே எந்த நாட்டில் உள்ளவர்களை முதலில் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளவர்கள் குறித்த தகவல்கள் அனைத்து வெளிநாடுகளின் தூதரகங்கள் மூலமும் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கைக்கு அழைத்துவரப்படுபவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் கட்டாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.