கொரோனா உலகை விட்டு நீங்காது - ஆய்வுகளை விட்டுவிட்டு கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்


உலகளவில், மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது. எனவே அதனுடன் வாழப் பழகுவது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸை உலகத்தில் இருந்து நாம் அடியோடு அழித்துவிட முடியாது. அது எப்போது நம்மிடமிருந்து விலகி மறையும் என்பதை கணிக்கவும் முடியாது. அத்தோடு, ஆட்கொல்லி வைரஸான எச்.ஐ.வி. போல கொரோனாவும் உயிர்ப்புடன் நம்முடனேயே இருக்கும்.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது.

எனவே இப்போது சரியாகும் என்று திகதிகள் எதிர்வு கூறுவதை விட்டுவிட்டு கொரோனா பாதிப்பை தவிர்த்து எப்படி வாழ வேண்டும் என்று பழகிக் கொள்ளுங்கள்.