வுஹானில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - மீண்டும் கொரோனா பீதி


சீனாவின் வுஹான் நகரில் வசிக்கும் 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. இதில் 82933 பேர் பாதிக்கப்பட்டு அதில் 4633 பேர் மரணித்தும் மிகுதி 78209 பேர் குணமடைந்தனர்.

அங்கு இயல்பு வாழ்கை திரும்பியிருந்த நிலையில், ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வுஹானில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இப் பரிசோதனையானது 10 நாட்களில் முடிக்கப்படவும் திட்டமிடடப்பட்டுள்ளது.