தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையர்கள் நாட்டுக்கு வர கோரிக்கை


கொரோன வைரஸ் காரணமாக தொழில்களை இழந்திருப்பவர்கள் கட்டாயம் நாட்டுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணியாளர்கள், மாணவர்கள் இலங்கைக்கு திரும்பி வருவது தொடர்பில் மீண்டும் ஒரு தடவை சிந்தித்து முடிவெடுக்குமாறு வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் விடுமுறையில் இலங்கைக்கு வர இருக்கும் பணியாளர்கள் உங்களது பயணத்தை மீண்டுமொருமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது ஏனெனில் இலங்கைக்கு வந்ததன் பின்னர் மீண்டும் உரிய நாடுகளுக்கு செல்ல முடியாவிட்டால் உங்களுடைய தொழில்களில் பாதிப்பு ஏற்படக் கூடும் கூடும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது போல் மாணவர்களை பொறுத்த வரையில் அவர்களும் தமது கல்வியை இடையில் விட்டு அல்லது பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு வருவதை பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் கட்டாயச் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஆரியசிங்க கோரியுள்ளார்.