நாட்டுக்கு போவது நிச்சயமற்றதாக இருந்தால் பதிவு செய்ய வேண்டாம் - இந்திய தூதரகம்அறிவிப்பு


வேலை இழப்பு, சம்பளம் இல்லை மற்றும் பல வலுவான காரணங்களை கூறி நாட்டுக்கு செல்லவேண்டும் என பதிவு செய்த்தவர்கள் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு அழைக்கும் போது மனம் மாறுவதாக இந்திய தூதரகம் அதன் ட்விட்டர் இல் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்திய தூதரகம் நாட்டுக்கு செல்வது குறித்து உறுதியான முடிவு இல்லையென்றால் திரும்பிச் செல்வதற்குரிய வேண்டுகோள் விடுத்து பதிவு செய்ய வேண்டாம் என்று கத்தாரில் உள்ள இந்தியர்களை கேட்டுள்ளது.

இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இன்னுமொருவரின் சந்தர்ப்பம் இழக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.