மத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள்வரக் கூடிய வாய்ப்பு


கத்தார் சவூதி போன்ற நாடுகளில் இன்று (22.05.2020) ஷவ்வால் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மத்திய கிழக்கு நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை அதாவது (24.05.2020) அன்று பெருநாள் கொண்டாடப்பட்ட இருக்கிறது.

இதே வேளை இன்று இரவு 29 ஆவது ரமலான் நோன்பை நோற்கவுள்ள இலங்கை இந்தியாவைச் சேர்ந்த எமது உறவுகள் நாளை இரவு நோன்புப் பெருநாள் பிறை பார்ப்பார்கள்.

ஷவ்வால் பிறை அவர்களுக்கு தென்படுமிடத்து அவர்களும் எம்மோடு நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள். இந்த வாய்ப்பு கிடப்பது மிக அரிது என்றாலும், இலங்கை இந்திய சகோதரர்களுக்கும் நோன்பு 30 ஆக கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பெருநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி கத்தார் சவூதி போன்ற நாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.