கத்தாரில் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (காபி கடைகள்) மீண்டும் திறக்க அனுமதி


கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முழுமையாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இன்று முதல் மீண்டும் விநியோக சேவைக்காக திறப்பதற்கு வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் படி விநியோகத்துக்கும் மற்றும் வியாபார நிலையத்துக்கு வெளியே ஓர்டர்களை வழங்குவதற்கும் ஷாப்பிங் மால்களில் உள்ளவை தவிர்ந்த அனைத்து உணவகம் மற்றும் கஃபே களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபே களுக்கு விநியோக சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இவ் அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் வியாபார நிலையங்களை பின்வரும் தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் தெரிவிக்குமாறு அமைச்சகம் நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது.

Call Center: 16001 and Email: info@moci.gov.qa

மூடப்பட்டிருந்த Exchange நிலையங்களும் இன்று முதல் திறப்பதற்கு கத்தாரில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.