பயணிகளிடம் பணம் கேட்ட விவகாரம், ஏர் இந்தியா விமானத்தை கேன்சல் செய்த கத்தார்.


பணம் கொடுத்தால் தான் உங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் என்னிடம் விமானம் உள்ளது இலவசமாக அனுப்பி வைக்கின்றேன் என்று கூறியது கத்தார் அரசு.
டிக்கெட்களுக்கு பணம் வாங்கியதால்தான் மே 10 ஆம் திகதி செல்ல இருந்த Air India விமானம் தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10 ஆம் தேதி தோஹாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தியா செல்லும் இரண்டாவது விமானம் மே 12 ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே..

"வந்தேபாரத்" என்று சொல்லி டிக்கெட்டுக்கு பணம் வாங்கி சொந்த மக்களை ஏமாற்றி கொண்டு செல்வது நிவாரண மீட்பு என்ற வகையில் சேர்க்க முடியாது அதனால்தான் ஏர் இந்தியா விமானம் கத்தாரில் தரை இறங்குவதை தடை செய்ததாக ஒரு செய்தி வந்துள்ளது.

இவ்வாறு விமானம் இந்தியாவிலிருந்து வர முடியாததால்தான் இந்த பயணம் மே 12 ஆம் திகதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தொழிநுட்ப காரணங்களுக்காகவே பயணத்திகதி மாறியமைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.