கொரோனா தாக்கத்தால் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான அறிவிப்பு


கொரோனா வைரஸ் காரணமாக நீங்கள் வீட்டிலேயே இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்தவரை சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம்.

இன்று அதிகமானவர்கள் கொரோனா தாக்கத்தின் காரணமாக வீட்டிலிருந்தே நிறுவன வேலைகளை செய்வதால், உடம்புக்கு வழமையாக கிடைத்த செயற்பாடுகள் (exercise) கிடைக்காமல் போனதால் உடல் சோர்வடைந்து தொற்றுநோய்களுக்கெதிராக போராட முடியாத நிலைமை ஏற்படும்.

ஏனெனில் உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்போது தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரசுக்கெதிரான போராட்டத்தை உடம்பு மேற்கொள்ளும்.

எனவே வீட்டிலிருக்கும் இளைஞ்சர்கள், பெரியோர்கள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குழந்தைகள் 1 மணி நேரம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளது.