ஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்தது சவுதி அரேபியா


சவுதி அரேபியா மே 23 முதல் மே 27 வரை வரவிருக்கும் ஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அறிமுகப்படுத்தும் என்று ராஜ்யத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுவரை, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது உட்பட - கட்டுப்பாடுகளை தளர்த்துவது ரமலான் இறுதி வரை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று சவூதி அரேபியாவில் 1,911 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் ஒன்பது புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இதுவரை சவுதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,925 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.