கத்தாரில் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறியுள்ளதா? பரவும் செய்திகள்


கத்தாரில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறிப் போயுள்ளதாக சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் இந்த செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
அந்த வாட்ஸ்அப் செய்தி;

கத்தாரில் ஒரு அறையில் தங்கியிருக்கும் 5 நபர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதை அறிந்ததும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து அவர்கள் அந்த அறையில் தங்குவதற்கே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்தும் ஆம்புலன்ஸ் பெற முயன்றும் எந்தப் பயனுமில்லை.

5 பேரில் ஒருவர் இரத்த வாந்தியெடுக்க தொடங்கினாலும், இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறையிலையே பாதுகாப்பாக இருக்கும் படி கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் முதல் அவர்களது சுகாதாரப் பிரிவுகள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.