பண பரிமாற்ற நிலையங்களுக்கு முன்னாள் அதிகரித்த கூட்டம் - தெளிவுபடுத்திக்கிறதுஅமைச்சு


வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் நேற்று முதல் கத்தாரில் பண பரிமாற்ற நிலையங்களை (Exchange) மீண்டும் திறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நிலையங்களுக்கு முன்னாள் கூடுதலான மக்கள் பணம் அனுப்புவதற்காக சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூடியிருப்பது போல் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

ஆனால் இப் படங்கள் கொரோனா பாதிப்புக்கு முதல் பகிரப்பட்டதாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இப் பழைய புகைப்படங்கள் கொரோனா பாதிப்பினால் மூடப்பட்டிருந்த பணப்பரிமாற்ற நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால், பணப் பரிமாற்ற நிலையங்களுக்கு முன்னால் கூட்டம் அதிகமாக இருப்பது போலவும், சமூக இடைவெளி இங்கு பின்பற்றப்படவில்லை என்றும் தவறான தகவல்கள் மக்களிடத்தில் பரப்பப்படுகிறது.

எனவே செய்திகளை சரி பார்த்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு அமைச்சு அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.

அறிவுறுத்தல்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக பரிமாற்ற அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், மீறுபவர்களுக்கு எதிரான அனைத்து சட்ட நடைமுறைகளையும் அமைச்சு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.