ஓமான் வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு


ஓமான் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஓமானில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கைப் பிரஜைகளின் நலன் கருதி, கொரோனா தொற்று பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பல உதவிகளைப் புரிந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தவகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள அல்லது கொரோனா வைரஸ் தொற்றியுள்ள ஓமானில் வாழும் எமது சக இலங்கையருக்கு உதவும் வகையில், நாம் இன்னொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளோம். இதற்காக ஓமானிலுள்ள இலங்கை சமுதாய கழகத்தின் கீழ் “இலங்கையர் மத்தியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான விசேட தொடர்புக் குழு” ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள அல்லது கொரோனா வைரஸ் தொற்றியுள்ள எமது சக இலங்கைப் பிரஜைகள் உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகள் மற்றும் “கொரண்டைன்” வசதிகள் அல்லது தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இத்தால் அறியத் தருகிறேன். எமது இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

தொலைபேசி இலக்கம்
79104838

பாதுகாப்பாக இருங்கள். உங்களை சூழ உள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்.