நாட்டுக்கு சென்று தொழில் செய்தால் தோற்றுப்போய்விடுவோம் என்று நினைப்பவர்களுக்கு!


உங்களுடைய வாழக்கையில் நீங்கள் எதிலும் அனுபவமில்லாதவர் எனின் அந்த அனுபவத்தை பல தோல்விகளால்தான் கற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் உழைக்க ஆரம்பிக்கும் போது பல வழியிலும் உங்களைத் தேடி வாய்ப்புக்கள் வரும். ஆனால் வருகின்ற வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தாமல் அதிஷ்டத்தை அல்லது வேறு ஒருத்தரை நம்பிக்கொண்டு இழக்க நேரிட்டால், சிலவேளை தேடி வந்த அந்த வாய்ப்புத்தான் உங்களின் வாழக்கையையே வெற்றியின் பக்கம் புரட்டிப் போட வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக பாடசாலைக் கல்வியில் வாழ்க்கைக்கு அல்லது வியாபாரத்திற்கு தேவையான அனைத்தும் சொல்லித்தரப்படுவதில்லை.

மாறாக அனுபவம், தேடல் மற்றும் முயற்சியுமே அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் என்பதை மறவாதீர்கள்.

எப்போது இன்னொருவரை அல்லது அவர் செய்யும் வியாபாரத்தை அடியொற்றாமல் உங்களுக்கென தனிப்பாதை அமைக்க திட்டமிடுகின்றீர்களோ, அப்போதே நீங்கள் வாழ்வில் அரைவாசி வென்றுவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இன்னொருவரை பின்பற்ற ஆரம்பித்தால் நிச்சயம் உங்களை கூட உங்களால் மாற்ற முடியாமல் போகலாம்.

உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்திதான் வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற லட்சிய வெறியில் வெல்லலாமே தவிர, உங்களிடம் இல்லாத திறமைக்கு முயற்சி செய்யப் போய் ஒரு காலும் வெல்லவே முடியாது அத்துடன் வீண் நஷ்டங்களையும் எதிர் கொள்வீர்கள்.

உண்மையில் யாரும் நினைக்க முடியாத சாதனைகள் கடினமான உழைப்பால் தான் உருவாகியிருக்கிறது. அதற்காக நீங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. கிடைக்கின்ற நேரமே பொன்னான நேரம் என கருதி கொஞ்சம் கொஞ்சமாக செலவிட்டாலே போதும். குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் கனவாக நினைத்த ஒன்றை சாத்தியமாக்கி காட்டுவீர்கள்.

எந்த தொழிலும் சிறந்த முறையில் வெற்றி பெற இலாபமோ நட்டமோ நீங்கள் விட்டுக்கொடுக்காமல் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.