கத்தார் மத்திய சிறையில் கொரோனாவின் தீவிர தாக்கம் என்ற குற்றச்சாட்டை கத்தார் நிராகரிப்பு


கத்தார் மத்திய சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளதாக கூறப்பட்டு மனித உரிமை கண்காணிகப்பதால் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கத்தார் அரசு நிராகரித்ததுடன் இது தவறான அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய சிறைச்சாலையில் 12 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மட்டுமே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதற்காகவும், அடையாளம் காணப்பட்டவர்கள் உடனடியாக மேலதிக மருத்துவ வசதிகளுக்காக ஹமாட் இனால் இயக்கப்படும் கொரோனா முகாம்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் அங்கு அவர்கள் முதற் தர சிகிச்சையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இவ் அறிக்கைகள், சரிபார்க்கப்படாத ஊகங்கள், பொறுப்பற்ற முறையில் கவனத்தைத் திசைதிருப்பல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.