வெளிநாடுகளில் சிக்கி, நாடு திரும்பத் தவிக்கும் இலங்கையர்கள்!


கொரோனா சூழ்நிலையினால் வெளிநாடுகளில் முடங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்பை எதிர்பாத்து காத்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சு உருவாக்கியிருந்த இணையம் ஊடாக இவ்வாறு தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 143 நாடுகளில் மாணவர்கள், தொழில் நிமித்தம் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா விசாவில் சென்ற 33000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களே இவ்வாறு பதிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 15 நாடுகளிலிருந்து இதுவரை 3600 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.