முஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.


இந்தியாவில் லாக்டவுனில் மாட்டிய நண்பர்களான யாகூப் மற்றும் அம்ரித் இருவரும் வேறு வழியின்றி ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிகமான கூட்டம் இருந்ததால் உட்காருவதற்கு கூட வழியில்லை நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.

நண்பர்கள் இருவரும் பயணம் செய்த வாகனம் மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அந்த லாரியில் இருந்த அனைவருக்கும் அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.

யாகூப்புக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் வாகனத்தைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார். தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.
அம்ரித்தின் உயிர் பிரிந்தது.முஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.

இதுதான் நண்பர்கள்