கத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம்தள்ளுபடியை அறிவித்தது


கத்தாரை தளமாகக் கொண்ட "கட்டாரா ஹாஸ்பிடாலிட்டி" மேம்பட்ட கட்டண அடிப்படையில் 2021 ஜூலை 31 வரை தங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் 50% சதவீத தள்ளுபடியுடன் கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நேற்று இவ் பிரத்யேக சலுகையை அறிமுகப்படுத்தியது.

இச் சலுகையைப் பெற்றுக்கொள்ள இலவச அழைப்பு இலக்கமான 800 8800 ஐ தொடர்பு கொண்டு கீழுள்ள ஹோட்டல்களில் உங்கள் பதிவுகளை மேற் கொள்ள முடியும்.
  • Ritz-Carlton
  • Sheraton Grand Doha Resort & Convention Hotel
  • Sharq Village & Spa, a Ritz-Carlton Hotel
  • Al Messila, a Luxury Collection Resort & Spa
  • Movenpick Hotel Doha
  • Sealine, a Murwab Resort
  • Simaisma, a Murwab Resort
  • The Avenue, a Murwab Hotel
இவ் புக்கிங் பேக்கேஜில், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தினசரி காலை உணவு, இணைய சேவை, வரவேற்பு பரிசுகள் போன்றவை உள்ளடங்குகிறது.

வரையறுக்கப்பட்ட முன்பதிவுகளே இருப்பதால் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளும்படியும், மேலும் ஜூன் 30 வரை மட்டுமே பதிவுகள் ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.