கத்தாரில் இன்று முதல் (May19-30) மூடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவைகளை அமைச்சுதெளிவுபடுத்தியது


COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான கத்தாரின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக்கிய துறைகள் மற்றும் நடவடிக்கைகள் தவிர, மே 19 முதல் 30 வரை அதாவது ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை மூட வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இவ் முடிவிலிருந்து விலக்களிக்கப்பட்ட வியாபர நிலையங்களையும் அமைச்சு தனது அடுத்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது, அவைகள்;
 • குரோசரி
 • காய்கறி கடைகள்
 • உணவகங்கள் (விநியோக சேவைகளுக்கு மட்டும்)
 • பல்பொருள் அங்காடிகள்
 • இனிப்பு மற்றும் சாக்லேட் கடைகள்
 • பேக்கரிகள்
மேலும்
 • சுகாதாரத் துறை, மருந்தகங்கள், கிளினிக்குகள்.
 • பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கேரேஜ்கள்
 • மேலும் செனையாவிலுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் பொறியியல் மேற்பார்வை சேவைகள்.
 • பராமரிப்புக்கான நிறுவனங்கள்
 • நிதி நிறுவனங்கள்.
 • தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொபைல் பயன்பாட்டின் மூலம் செயல்படும் விநியோக சேவை நிறுவனங்கள், ஹோட்டல் துறையில் உள்ள பொது நிறுவனங்கள், லாஜிஸ்டிக் சேவைகளுக்கான நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள பொது நிறுவனங்கள்.
போன்றவையும் இதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது என்றும் அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.