டிக்கெட்டுகள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுவதுடன், எத்தனை முறையும் திகதி மாற்றம் செய்யலாம்.
கத்தார் ஏர்வேஸில் பதிவு செய்த டிக்கெட்டுகள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் பயணிகள் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பயணத் திகதியை இலவசமாக மாற்றியமைக்க முடியும் என்றும் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் அலுவலகங்கள் அல்லது தொடர்பு மையங்களுக்கு அழைப்பதன் மூலம் பயணிகள் தங்களது டிக்கெட்டின் திகதியை மாற்றம் செய்து கொள்ள முடியும்.