கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி


கொரோனா வைரஸ் ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியான  மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார்.     

கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், மீண்டும் தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடுமென நிபுணர்கள் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோ அதனோம், கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் செல்லும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.