வீதிகளிலோ அல்லது கட்டிடங்களிலோ மருந்து தெளிப்பதால் கொரோனா வைரஸ் சாகாது - WHOதகவல்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய் பரவாமல் தடுக்க வீதிகள் நிறுவன மற்றும் தங்குமிட கட்டிடங்களில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கப்படு வருகின்றன.

ஆனால் இவ்வாறு கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது, ஏனென்றால் கிருமி நாசினிகள் அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழக்கப்பட்டுவிடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் தனி நபர்கள் மீது எந்த சூழ்நிலையிலும் கிருமி நாசினி தெளிப்பதற்கும் அவர்கள் பரிந்துரைக்கவில்லை. இவ்வாரு தெளிப்பதனால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.