அனைத்து கத்தார் குடியிருப்பாளர்களும் கோவிட் -19 தடுப்பூசி இலவசம்

 
அனைத்து கத்தார் குடியிருப்பாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசியை இலவசமாக வழங்க கத்தார் பொது சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Sars-CoV-2 க்கு எதிரான BNT 162 mRNA அடிப்படையிலான தடுப்பூசியை கத்தார் வழங்குவதற்காக ஃபைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்துடன் MoPH ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக Dr al-Khal அறிவித்திருந்தார்.

வெற்றிகரமான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி October மாத இறுதியில் அல்லது  நவம்பர் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்படலாம். எனவே, கத்தாருக்கான தடுப்பூசி விநியோகம்  டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை நாட்டில் கிடைக்கக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி கிடைக்கும் அளவுகளுக்கு ஏற்ப  வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


Source : https://www.gulf-times.com/story/674602