கத்தாருக்கு வருகை தரும் அனைவருக்குமான தனிமைப்படுத்தல் அவசியம் டிசம்பர் 31 வரை நீடிப்புகத்தார் நாட்டு குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசா வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களுக்கும், 2020 டிசம்பர் 31 வரை  தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள்  நீட்டிக்கப்பட்டுள்ளன என்று டிஸ்கவர் கத்தார் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக தனிமைப்படுத்தப்பட்ட தேவை அக்டோபர் 31 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார் நாட்டினருக்கு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிரந்தர வதிவிட அட்டை உள்ளவர்கள் அல்லது விதிவிலக்காக அங்கீகரிக்கப்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கு கட்டாருக்கு வருவதற்கு அனுமதி உண்டு.

QID வதிவிட அனுமதி வைத்திருப்பவர்கள் கத்தார் போர்ட்டல் மூலம்  பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.  

அதில் வீடு அல்லது ஹோட்டல் தனிமைப்படுத்தல் என்பது கிடைக்கும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.