கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

 


அமெரிக்காவின் ஜோன்சன் ஏண்ட் ஜோன்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தனது தடுப்பூசி சோதனையை நிறுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சித்து  வருகின்றன. 

அமெரிக்காவின் ஜோன்சன் ஏண்ட் ஜோன்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2 ஆம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜோன்சன் ஏண்ட் ஜோன்சன் 3 ஆம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தடுப்பூசி பிரிசோதனையை தற்காலிகமாக ஜோன்சன் ஏண்ட் ஜோன்சன் நிறுத்தி வைத்துள்ளது. 

60 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதனை மேற்கொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.