வெளிநாடுகளில் இலங்கையர்கள் வேலையில்லாமல் பூங்காக்களில் உறங்கும் நிலைமை

 


கொரோனா பாதிப்பின் காரணமாக துபாய்க்கு வேலை தேடி வந்தவர்கள் மற்றும் கம்பனிகளில் வேலையிழந்து இருப்பவர்கள், வருமானமில்லாமல் தங்கும் அறைக்கு பணம் கொடுக்க முடியாமலும் துபாயில் உள்ள சத்வா பூங்காவில் ஒன்று கூடி வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் 03- மாத விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருட ஆரம்பத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடி வந்தவர்களாகும்.

மற்றும் பலர் பணிபுரிந்த கம்பனிகளிலிருந்து  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வேலை இழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பூங்காவில் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வீடற்ற 21 இலங்கையர்கள்  செப்டம்பர் மாதம் பூங்காவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மீண்டும் இலங்கையர்களை நாட்டுக்குள் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அதிகமான இலங்கையர்கள் பூங்காவுக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துபாய் காவல்துறை இவர்களை  தற்காலிக தங்குமிட முகாம்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது, ஆனால் இடவசதி இல்லாததால் அனைவருக்கும் இடமளிக்க முடியவில்லை.